Friday, 27 July 2012
Thursday, 19 July 2012
ஆசைகள்
அடை மழையில் ஒற்றைக் குடையில்
உன் கைகோர்த்து நடந்திட ஆசை!
நீ கண்ணுறங்கும் வேளையில்
கண் இமைக்காமல் உன்னை காண ஆசை!
இன்பத்திலும் துன்பத்திலும்
உன் தோள் சாய ஆசை!
நீ அமுதுண்ணும் வேளையில்
ஆசையாய் ஆ காட்ட ஆசை!
முழு நிலா நாளில் உன் கை கோர்த்து
நட்சத்திரங்கள் எண்ண ஆசை!
துயில் எழுகையில் என் கதிரவனாய்ஒளி தரும்
உன் கண்களைக் காண ஆசை!
நிதம் உறங்கும் முன் என் கண்கள் காணும்
பிம்பம் உனதாக இருக்க ஆசை!
பிள்ளைகள் ஒன்றிரண்டு இருந்தாலும்
முதுமையிலும் உன்னை கொஞ்சிட ஆசை!
நாம் காணப் போகும் வாழ்வினில் சிறு சிறு
ஊடல்களும், ஊடலின் முடிவில்
கூடலும் இருந்திட ஆசை!
ஆசைகள் பல பல...
நிறைவேறும் நாளும்
விரைவினில் வந்திட ஆசையடா!!!
Location: Chennai, India
Chennai, Tamil Nadu, India
Subscribe to:
Posts (Atom)


